ஸ்ரீ பூர்ணமஹாமேரு டிரஸ்ட்

காஞ்சி ஸ்ரீ மகா பெரியவர் அறிவுரையுடன் இத்தொண்டு நிறுவனம் 1987ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஸ்ரீ பூர்ணமஹாமேரு டிரஸ்ட் என்ற பெயரும் ஸ்ரீ காஞ்சி மஹான் அவர்களால் தேர்வு செய்யப்பட்டது. அவர் அருளிய பெயரால் இத்தொண்டு நிறுவனம் சாதி, மத, பேதமற்ற பொது தொண்டு நிறுவனமாக 1993ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது.

அதுமுதல் கடந்த 25 வருடங்களாக இன்று வரைக்கும் ஆதரவற்ற முதியோர்களுக்கும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சமுதாயத்தில் கடை நிலையில் உள்ளோர்களுக்கும் இயன்ற உதவியை  புரிந்து வருகின்றது. சென்னை மட்டுமல்லாது தமிழ்நாடு அளவில் அன்னதானத்  திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றது.

திட்டப்பணிகள்:

  1. திரிவேணி ஆதரவற்ற முதியோர் இல்லம்:

திரிவேணி  இல்லம் 40 பேர்  தங்கும் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதில் தங்கியுள்ள அனைத்து முதியோர்களுக்கும் இலவச உணவு, உடை, மருத்துவ வசதி போன்ற அனைத்து தேவைகளையும் அவர்களது இறுதிக் காலம் வரை வழங்கிவருகிறது. இறந்த பின்னர் அவர்களது இறுதிச் சடங்கும் செய்யப்படுகிறது.

2.  ஸ்ரீ மாதா நித்ய அன்னதானத் திட்டம்:

எங்களது இல்லவளாகத்தினுள் பசியுடன் நுழையும் அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்கிவருகின்றோம். சாதாரண நாட்களிலும், இயற்கைப் பேரிடர் சமயங்களிலும் நாங்கள் குடிசைப்பகுதிகள், தொலைதூர கிராமங்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்குச் சென்று அன்னதானம் வழங்குகிறோம். இது தவிர தீபாவளி, சித்ரா பௌர்ணமி, நவராத்திரி போன்ற பண்டிகை நாட்களிலும், மற்ற விசேஷ நாட்களிலும்  பெரிய அளவில் அன்னதானம் வழங்குகிறோம்.

  1. ஸ்ரீ நாராயண குரு தொழு நோயாளிகள் சேவை:

எங்களது இல்லத் தன்னார்வத் தொண்டர்கள் சென்னையை சுற்றியுள்ள சில தொழுநோய் மையங்களுக்குச் சென்று தொடர்ந்து இலவச உணவு அளித்து வருகிறார்கள். மேலும் அவர்களுக்கு ஆடைகள், பாத்திரங்கள் மற்றும் தேவைப்படும் பொருட்கள் வழங்கு வருகின்றோம்.

  1. தன்வந்திரி இலவச மருத்துவ சேவை மையம்:

எங்கள் வளாகத்தில் அமைந்துள்ள மருத்துவ மையம், இல்லத்தில் தங்கியுள்ள அனைத்து முதியோர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை வழங்குகிறது, தவிர அருகிலுள்ள இடங்களிலிருந்து வரும் பொதுமக்களுக்கும் அடிப்படை மருத்துவ உதவிகளை வழங்கிவருகிறது. மேலும் பல்வேறு மருத்துவ அமைப்புகளுடன் இணைந்து இலவச மருத்துவ முகாம்களையும் அவ்வப்போது ஏற்பாடு செய்துவருகிறது.

  1. ஸ்ரீ அபிநவ் வித்யா தீர்த்த கல்வி உதவி தொகை:

கல்விபயிலும் வசதியில்லாத குழந்தைகளுக்கும், தொழு நோயாளிகளின்  குழந்தைகளுக்கும், இல்லத்தில் பணிபுரியும் ஊழியர்களின் குழந்தைகளுக்கும் வருடந்தோறும் கல்வி உதவித்தொகை வழங்கிவருகிறோம்.

  1. சந்த் துக்காராம் கலை, பண்பாடு மேம்பாட்டுத் திட்டம்:

எங்களது தொண்டு நிறுவன வளாகத்தில் கர்நாடக இசை கச்சேரி, பரதநாட்டியம், ஹரிகதா, பஜனைகள்  நாட்டுப்புற இசை மற்றும் நடனங்கள், ஓவியங்கள் வரைதல் போன்ற கலை நகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இதன்மூலம் சம்மந்தப்பட்ட கலைஞர்களை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாது இவ்வகை அறிய கலைப் பொக்கிஷங்களை  அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்ல உதவி புரிகிறோம்.

  1. இயற்கை சீற்றங்களின் போது மனித சேவா:

இயற்கை  பேரிடர் அழிவு காலங்களில் தேவையான உதவிகளை செய்வதில் எங்களது தொண்டு நிறுவனம் முன்னுதாரணமாகத் திகழ்கிறது. உதாரணமாக, 2015 சென்னைப் பெருவெள்ளம், 2016 வர்தாபுயல், 2018 கேரளா பெருவெள்ளம், 2018 கஜா புயல் ஆகியவற்றின் போதும் பெரும்பங்கு ஆற்றியுள்ளது.